இன்றைய தேதியில் சினிமாவுக்கு சமமாக வெப் தொடர்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. இதனால் முன்னணி நட்சத்திரங்கள் கூட சினிமாவில் நடிப்பது போலவே, வெப் தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ஃபால் என்கிற வெப் தொடர் வரும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/11/fall-1-1024x1024.jpg)
இந்தத் தொடரில் அஞ்சலியுடன் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்
‘ஃபால்’ (Fall) தொடரை இயக்கியதுடன் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் இயக்குநர் சித்தார்த் ராமசாமி. இத்தொடருக்கு அஜேஷ் இசையமைக்க, படத்தொகுப்பை கிஷன் C செழியன் கவனிக்கிறார்
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/11/fall-2-1024x614.jpg)
ஒரு இளம் பெண்ணுக்கு தான் தற்கொலைக்கு முயன்ற 24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை தேட ஆரம்பிக்கிறாள், தன் நண்பர்கள் உறவினர்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவர, எது உண்மை யாரை நம்புவது எனும் குழப்பம் உண்டாகிறது. மறந்து போன தன் நினைவுகளிலிருந்து உண்மையை கண்டுபிடிக்க முயல்கிறாள். இதுதான் இந்த தொடரின் கதை வெர்டிஜ்” எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும்.