V4UMEDIA
HomeNewsKollywoodதிடீரென பள்ளி மாறும் மாணவனின் சங்கடங்கள் தான் ரங்கோலி

திடீரென பள்ளி மாறும் மாணவனின் சங்கடங்கள் தான் ரங்கோலி

சென்னை-28 படத்தில் ராயபுரத்தில் வசிக்கும் ஜெய் திடீரென அவரது தந்தையின் பணி மாறுதல் காரணமாக ராஜா அண்ணாமலைபுரத்தில் குடியேறும் சூழலுக்கு தள்ளப்படுவார். நண்பர்கள் எல்லாம் ராயபுரத்தில் இருக்க இவர் மட்டும் ராஜா அண்ணாமலைபுரத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆளே இல்லாமல் தனித்து இருப்பார். அதன்பிறகு புது நண்பர்கள் பிடித்து ஒரு வழியாக செட் ஆவதற்குள் போதும் போதும் என ஆகிவிடும். இது இவர் படித்து முடித்த பின்பு நடப்பது..

அதேசமயம் ஒரு பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவனுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டால் ? ஆம்.. குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் ரங்கோலி.

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகாமகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ்  முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார் இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ்  இயக்கியுள்ளார்.

தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படத்தின் இரண்டாவது லுக் நேற்று எம் ஜி ஆர் யுனிவர்சிடி & ரிசர்ச் கல்லூரி கல்ச்சுரல் விழாவில் 2000 கல்லூரி மாணவர்கள் மத்தியில் கல்லூரி பிரசிடண்ட் MR. ACS அருண்குமார் அவர்களால் கோலாகலமாக வெளியிடப்பட்டது.

Most Popular

Recent Comments