3 படத்தில் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதைத் தொடர்ந்து வை ராஜா வை என்கிற படத்தில் கவுதம் கார்த்திக்கை வைத்து இயக்கினார். தற்போது ஒரு மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு தனது மூன்றாவது படமாக லால் சலாம் என்கிற படத்தை இயக்குகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் துவக்க விழா நிகழ்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்தப் படத்தில் கதாநாயகிகளாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் நடிக்கின்றனர். அதுமட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த நிலையில் மும்பையில் உள்ள தனது ஸ்டுடியோவில் இந்த படத்திற்கான இசை பணிகளை துவங்கியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

அவருடன் இந்த படத்தின் பாடல்களுக்கான மெட்டு அமைக்கும் வேலைகளில் கலந்து கொண்டுள்ளார் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.




















