V4UMEDIA
HomeNewsKollywoodவெப் சீரிஸை பார்ப்பதும் ஒருவித சுற்றுலா மாதிரி தான் ; புஷ்கர் காயத்ரி

வெப் சீரிஸை பார்ப்பதும் ஒருவித சுற்றுலா மாதிரி தான் ; புஷ்கர் காயத்ரி

விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்து சூப்பர்ஹிட்டான விக்ரம்வேதா திரைப்படத்தை இயக்கியவர்கள் இரட்டை இயக்குனர்களான கணவன்-மனைவி புஷ்கர் காயத்ரி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியில் அதே படத்தை ரீமேக் செய்து இயக்கி சமீபத்தில் அந்த படம் வெளியாகி அங்கேயும் வரவேற்பை பெற்றது.

இது தவிர வெப்சீரிஸ் தயாரிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்கள் புஷ்கர், காயத்ரி. ஏற்கனவே அவர்களது தயாரிப்பில் சுழல் என்கிற வெப் சீரிஸ் வெளியான நிலையில் தற்போது வதந்தி என்கிற வெப்சீரிஸ் வரும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்த வெப்சீரிஸில் எஸ்ஜே சூர்யா கதாநாயகனாக, நடிக்க முக்கிய வேடங்களில் லைலா, நாசர், விவேக் பிரசன்னா, சஞ்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எஸ்ஜே சூரியா வாலி படத்தை இயக்கிய சமயத்திலிருந்து அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆண்ட்ரூ லூயிஸ் என்பவர்தான் இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார்.

கிட்டதட்ட 240 நாடுகளில் அமேசான் பிரைம் மூலம் இந்த வெப் சீரிஸை பார்க்கமுடியும். இதுகுறித்து இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கூறும்போது வெப் சீரிஸை பார்ப்பது என்பது ஒருவிதமான சுற்றுலா போலத்தான்.. அனைத்து தரப்பு மக்களையும் அது சென்றடைகிறது என்று கூறியுள்ளனர்

Most Popular

Recent Comments