வாகை சூட வா திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகையாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை இனியா. அதைத்தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இனியா தற்போது காபி என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் இனிய தவிர நடிகர்கள் ராகுல் தேவ். முக்தா. ராம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் வரும் நவம்பர் 27ஆம் தேதி இந்தப் படம் நேரடியாக கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியாகிறது.
இதற்கு முன்னதாக விக்ரம் பிரபு நடித்த புலிகுத்தி பாண்டி என்கிற படம் இதுபோன்று தியேட்டர்களிலோ, ஓடிடி தளத்திலோ வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த காபி படத்தில் இனியா போலீஸ் வேளைக்கு முயற்சி செய்து, ஆனால் சந்தர்ப்ப சூழலால் ஒரு டாக்சி டிரைவராக வாழ்க்கையை தொடரும் பெண் பாத்திரத்தில் நடித்துள்ளார். தனது சகோதரன் திடீரென காணாமல் போக அதன் பின்னணியில் உள்ள மர்மத்தை தனியாளாக கண்டுபிடிக்கும் துணிச்சலான ஒரு பெண்ணாகவும் இந்த படத்தில் நடித்துள்ளார் இனியா.