விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் கொலைகாரன். இந்த படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு சைமன் கே கிங் என்பவர் இசை அமைத்திருந்தார்.

இது தவிர சிபிராஜ் நடித்த கபடதாரி, சத்யா போன்ற திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். மேலும் பல்வேறு குறிப்பிடத்தக்க பின்னணி இசையிலும் பாடல்களிலும் பேசப்பட்டார்.
இந்தநிலையில் கொலைகாரன் திரைப்பட இயக்குனர் ஆண்ட்ரூ லுயிஸ் உடன் புதிய படத்தில் இசைக்கூட்டணி அமைத்துள்ளார் சைமன் கே கிங்.

அமேசன் பிரைம் தொடரான வதந்தி வெப்சீரிஸ் மூலம் மீண்டும் ரசிகர்களை தன் இசையால் தன்வசப்படுத்த போகிறார் சைமன் கே கிங். இந்த வெப்சீரிஸை இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி தயாரிக்கின்றனர் எஸ்ஜே சூர்யா, லைலா, நாசர் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிருத்திகா உதயநிதிக்காக ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெற்றிகரமான வலைத் தொடரில் சைமன் கே கிங் பணியாற்றினார் குறிப்பிடத்தக்கது.