V4UMEDIA
HomeNewsKollywoodநயன்தாரா வீட்டிற்கே சென்று குழந்தைகளை வாழ்த்திய ராதிகா

நயன்தாரா வீட்டிற்கே சென்று குழந்தைகளை வாழ்த்திய ராதிகா

தமிழ் திரை உலகில் இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜோடி நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி தான். நானும் ரவுடிதான் படத்தில் இருந்து காதலித்து வந்த இவர்கள் கடந்த ஜூன் மாதம் பாண்டிச்சேரியில் திருமணம் செய்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து சமீபத்தில் அதாவது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாங்கள் இரட்டை குழந்தைக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு குழந்தைகளின் புகைப்படங்களையும் வெளியிட்டனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

பின்னர் தான் அவர்கள் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்ற விவரம் வெளியே தெரியவந்தது. அதிலும் கூட சில சர்ச்சையான கருத்துக்கள் பரப்பப்பட்டு, அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தான் இந்த குழந்தைகளை வாடகைத்தாய் மூலமாக பெற்றுள்ளார்கள் என ஒரு வழியாக அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் நடிகை ராதிகா விக்னேஷ் சிவன் வீட்டிற்கே சென்று இரட்டைக்குழந்தைகளைப் பார்த்து தனது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கி விட்டு வந்துள்ளார்.

நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோதுதான் நயன்தாராவுக்கும் அவருக்கும் காதல் அரும்பியது. அந்த சமயத்தில் அந்த படப்பிடிப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராதிகாவுக்கு இவர்களது காதல் அப்போதே தெரியும்.. அதை உற்சாகப்படுத்தவும் செய்தார் என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் அவர் தனது பேரக்குழந்தைகளை பார்க்கும் உரிமையுடன் சென்று நயன்தாரா, விக்னேஷ் சிவன் வீட்டிற்கு சென்று குழந்தைகளை பார்த்து விட்டு வந்துள்ளார் என்று தெரிகிறது. இதுகுறித்து அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராதிகா.

Most Popular

Recent Comments