அசோக் செல்வன் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் நித்தம் ஒரு வானம். அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகிகளாக ரிது வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர்,

இந்தப்படம் ஒரு இளைஞனின் மூன்று வெவ்வேறு கட்ட வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகி இருந்தது. ஒரு ஃபீல் குட் காதல் படமாக இந்த படம் ரசிகர்கள் அனைவரிடமும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அசோக்செல்வன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்த அசோக் செல்வன் மற்றும் இயக்குனர் இருவரும் அவரிடம் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பெற்றுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது படம் குறித்து இயக்குனர் மணிரத்னம் சிலாகித்து பேசியதாக கூறப்படுகிறது.