பொன்னியின் செல்வன் படத்தின் பிரதான நாயகனாக அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியையும் இதற்கு முன்பு இருந்ததை விட மிகப்பெரிய புகழையும் பெற்றுள்ளார் நடிகர் ஜெயம் ரவி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வரும் என சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் ஏற்கனவே ஜெயம் ரவி தான் நடித்து வந்த அகிலன் மற்றும் சைரன் ஆகிய படங்களின் வேலைகளை கவனிக்க துவங்கியுள்ளார்.

அந்த வகையில் ஆண்டனி பாக்யராஜ் டைரக்சனில் அவர் நடித்துவரும் சைரன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை காரைக்காலில் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ஜெயம்ரவி.

இதைத்தொடர்ந்து தான் ஏற்கனவே நடித்து முடித்துள்ள அகிலன் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்தை ஜெயம் ரவியை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் இந்த அகிலன் படம்தான் வெளியாக இருக்கிறது.