இயக்குனர் சுதா கொங்கராவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது அவர் இயக்கிய இறுதிச்சுற்று திரைப்படம். மாதவன் கதாநாயகனாக நடித்த இந்த படம் குத்துச்சண்டையை, அதிலும் குறிப்பாக பெண் குத்துச்சண்டை வீராங்கனையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. இந்த படத்தில் நிஜமான குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை. ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்த சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார் ரித்திகா சிங்.
இந்த நிலையில் தற்போது முதல்முறையாக மலையாளத் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் ரித்திகா. ஆனால் கதாநாயகியாக அல்ல.. ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுகிறார்.
துல்கர் சல்மான் தற்போது நடித்து வரும் கிங் ஆப் கோத என்கிற படத்தில் தான் இவர் ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடுகிறார். இந்த பாடலுக்கு இதற்கு முன்பாக சமந்தாவை தான் ஒப்பந்தம் செய்வதாக முடிவு செய்திருந்தார்கள்.
ஆனால் சமீப நாட்களாக அவரது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவருக்கு பதிலாக ரித்திகா சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இந்த படத்தில் துல்கர் ஜோடியாக கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்,