அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதைத்தொடர்ந்து நிமிர் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த நபர், வீட்டிலிருந்து ஆறு லட்சம், மூன்று லட்சம் என லட்ச கணக்கில் மதிப்புள்ள கை கடிகாரங்களையும் மற்றும் லேப்டாப் செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் திருடிவிட்டார் என்று அவர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் இவ்விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் சில ஊடகங்கள் நடிகை பார்வதி நாயரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கும் கற்பிக்கும் வகையில் அவதாறான செய்திகளை வெளியிட்டிருப்பது பார்வதி நாயரின் கவனத்திற்கு வந்தது.
இதைத்தொடர்ந்து இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.