நடிகர் வடிவேலு கடந்த 10 வருட இடைவெளியில் கத்திச்சண்டை மற்றும் மெர்சல் என மிக சில படங்களில் மட்டுமே நடித்தார். தற்போது மீண்டும் அவரது புதிய இன்னிங்ஸ் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இதில் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் வடிவேலு.
அவருடன் இணைந்து பல சூப்பர் ஹிட் காமெடிகளை கொடுத்த இயக்குனர் சுராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து அப்பத்தா என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை வடிவேலுவே பாடி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வடிவேலுவின் ஆத்மார்த்த நண்பரான பிரபுதேவா இந்த பாடலுக்கு நடனம் வடிவமைத்துள்ளார்.
எட்டணா இருந்தா என்பது போன்ற வடிவேலு முன்பு பாடிய பாடல்களில் இருந்து விலகி இது முற்றிலும் புதிய பாணியில் உருவாகியுள்ளது
இந்த பாடலில் வடிவேலுவின் ஸ்டைலான லுக்கும், நடனக்குழுவுடன் அவர் ஆடும் வித்தியாசமான நடனமும் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக உருவாகி உள்ளது.