இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். கதாநாயகியை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்குகியது. இதில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார்.

முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும். இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10 ஆக இப்படத்தை இயக்கி தயாரித்து வருகிறார்.

படத்தின் கதை கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் முழு நீள திரைக்கதையாக பல சுவாரசியமான கூறுகளுடன் உருவாக்கி வசனம் எழுதியுள்ளார். பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ், மூவரும் இந்த திரைக்கதையை ஆலோசித்து 6 மாதங்களுக்கும் மேலாக உழைத்து, ஆர்.கண்ணனிடம் பைண்ட் ஸ்கிரிப்டை வழங்கியுள்ளனர். அவர், இன்று முதல் சென்னையில் படமாக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்.

ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு 3 மாதங்களில் முடிவடையும் என்று தெரிவித்துள்ளார்கள்.