V4UMEDIA
HomeNewsKollywoodஆர்.ஜே பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கும் சிங்கப்பூர் சலூன்

ஆர்.ஜே பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கும் சிங்கப்பூர் சலூன்

நகைச்சுவை நடிகராக இருந்த ஆர்ஜே பாலாஜி இயக்குனராகவும் கதாநாயகனாகவும் மாறியது எல்கேஜி படத்தில் தான். அந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.

அதன்பிறகு மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த ஆர்ஜே பாலாஜி, தற்போது சிங்கப்பூர் சலூன் என்கிற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தையும் ஐசரி கணேஷ் தான் தயாரிக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்குகிறார் இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாகும் விதமாக இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் கதாநாயகி உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது..

Most Popular

Recent Comments