நடிகர் விஜய்யின் உறவினர், அவரது தம்பி என்கிற அறிமுகத்துடன் கற்றது களவு என்கிற படத்தில் இயக்குனர் ஆர்வி உதயகுமாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் விக்ராந்த். அதைத்தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாகவும் சில படங்களில் இன்னொரு நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் விக்ராந்த்.
ஆனால் அவருக்கென இன்னும் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு மிகப்பெரிய ஹிட் படம் அமையவில்லை. குறிப்பாக விக்ராந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களில் எல்லாம் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பாண்டிய நாடு திரைப்படம் அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
இந்த நிலையில் தான் விக்ராந்துக்கு மீண்டும் தான் எழுந்து நிற்பதற்கு ஒரு வாய்ப்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார். இதையெல்லாம் தாண்டி இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
தற்போது அவர் விக்ரகத்திற்கு தந்தையாக நடிக்கிறார் என்கிற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதைவிட விக்ரமிற்கு தனது திரையுலக பயணத்தில் ஜாக்பாட் வாய்ப்பு ஒன்று கிடைத்துவிடுமா என்ன ? நிச்சயமாக இந்த படம் அவரது வளர்ச்சிக்கு அடுத்த கட்டத்திற்கு உதவியாக இருப்பது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவருமே சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள். இந்த படமும் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் கதைக்களத்தில் இருப்பதால் அதற்கு தோதான இந்த இரண்டு நடிகர்களையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேர்வு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.