V4UMEDIA
HomeNewsKollywoodசூப்பர் ஹீரோ கதையம்சத்துடன் உருவாகியுள்ள படத்தில் வரலட்சுமி-அம்ரிதா ஐயர்

சூப்பர் ஹீரோ கதையம்சத்துடன் உருவாகியுள்ள படத்தில் வரலட்சுமி-அம்ரிதா ஐயர்

சூப்பர்மேன் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு. அந்த வகையில் தெலுங்கில் சூப்பர்மேன் படமாக உருவாகியுள்ளது ஹனுமேன் திரைப்படம்.

இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நாயகன் தேஜா சஜ்ஜா கதாநாயகனாக நடித்துள்ளார் கதாநாயகியாக அமிர்தா ஐயர் நடிக்க, முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். பிரசாந்த் வர்மா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருக்கிறது. இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தின் டீசர் நவம்பர் 15 ஆம் தேதியன்று வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.  ‘ஹனு-மேன்’ திரைப்படம், தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

Most Popular

Recent Comments