V4UMEDIA
HomeNewsKollywoodஜிவி பிரகாஷ் படம் மூலம் மீண்டும் தயாரிப்புக்கு திரும்பிய கவிதாலயா

ஜிவி பிரகாஷ் படம் மூலம் மீண்டும் தயாரிப்புக்கு திரும்பிய கவிதாலயா

தமிழ் சினிமாவின் மறைந்த ஜாம்பவான் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் உருவாக்கிய நிறுவனம்தான் கவிதாலயா. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த நெற்றிக்கண் திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் திரை உலகில் அடி எடுத்து வைத்த இந்த நிறுவனம் அதன்பிறகு கமல் விஜய், கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை தயாரித்துள்ளது.

அதேசமயம் கடந்த பல வருடங்களாக தயாரிப்பை விட்டு ஒதுங்கி இருந்த இந்த நிறுவனம் தற்போது மீண்டும் பட தயாரிப்பை தொடங்கியுள்ளது. இந்த முறை ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது கவிதாலயா நிறுவனம்.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையான அனஸ்வரா ராஜன் என்பவர் நடித்துள்ளார். இந்தப் படத்தை உதய் மகேஷ் என்பவர் இயக்குகிறார். இவர் வேறு யாருமல்ல ஒளிப்பதிவாளர் நட்டியை ஒரு நடிகராக நாளை என்கிற படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் உதயபானு மகேஸ்வரன் தான். அதன்பிறகு சக்கர வியூகம் என்கிற படத்தையும் நட்டியை வைத்து இயக்கியிருந்தார். பின்னர் குணச்சித்திர நடிகராக மாறி பல படங்களில் நடித்துள்ளார்.

இவரின் கதை-திரைக்கதையில் கே பாலச்சந்தர் இயக்கிய சாந்தி நிலையம் மிகவும் பிரபலமான தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகன் ஜி வி பிரகாஷ்குமாருக்கும் அவரின் 6 வயதான அக்கா மகளுக்கும் இடையில் நடைபெறும் பாச உணர்வினை அழகிய குடும்ப பின்னணியில் விவரித்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக உருவாகிறது இப்படம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கி நடைபெறுகிறது.

சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், மதுசூதனன், குமரவேல், முத்துக்குமார், டேனியல், நமோநாராயணன், மயில்சாமி, முத்துக்காளை, சௌந்தர், பேபி மேக்னா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Most Popular

Recent Comments