
உதயநிதியின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் மாமன்னன் மற்றும் கலகத்தலைவன் ஆகிய இரண்டு படங்களும் அவரது திரையுலக பயணத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். அதேபோல இருக்கை நுனியில் அமர வைக்கும் திரில்லர் படங்களை கொடுப்பதற்கு பெயர் பெற்ற இயக்குனர் மகிழ் திருமேனி கலகத்தலைவன் படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கலகத்தலைவன் படம் வரும் நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது என்றும் சொல்லலாம்.