இந்த வருடம் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என தொடர் வெற்றிகளை கொடுத்துவரும் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் வாத்தி. முதன்முதலாக நேரடியாக தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.
இந்த படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க, இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் குறித்த அப்டேட்கள் வெளிவர துவங்கியுள்ளன. அந்தவகையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.