தளபதி விஜய் தெலுங்கில் முதல் முறையாக நடித்துள்ள படம் வாரிசு. தெலுங்கில் நடித்துள்ளார் என்றாலும் முழுக்க முழுக்க தமிழ் ரசிகர்களை மனதில் வைத்தே இந்த படம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே தோழா என்கிற படம் மூலம் தமிழ் ரசிகர்களை தனது அலைவரிசைக்கு ஏற்ப ட்யூன் செய்துவிட்ட இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

அதனாலேயே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு இசையமைப்பது மூலம் முதன்முறையாக விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் இசையமைப்பாளர் தமன்.

அவருடன் இணைந்த முதல் படம் என்பதாலேயே அனைத்து பாடல்களையும் தாறுமாறு ஹிட்டாக கொடுத்து விட வேண்டுமென முனைப்புடன் இந்த படத்திற்காக இசையமைத்துள்ளார் தமன்.

அந்த வகையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த படி இன்று இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே என்கிற பாடல் வெளியாகி உள்ளது. வெளியான 5 மணி நேரத்தில் 6 மில்லியன் பார்வையாளர்கள் இந்த பாடலைப் பார்த்து ரசித்துள்ளனர்.

அந்த அளவிற்கு ஏற்கனவே பீஸ்ட் படத்தில் அனிருத் இசையில் வெளியான அரபிக்குத்து பாடல் போலவே இந்த பாடலும் மிக அதிக அளவிலான ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த பாடலுக்கும் அரபி குத்துப்பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் தான் நடனம் அமைத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. பாடலாசிரியர் விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார்.

இந்த பாடல் வரிகளும் அதற்கு ஏற்ப விஜய்யும் எம்எம் மானசியும் இணைந்து பாடிய விதமும் கூடவே விஜய் ராஷ்மிகா ஜோடியின் நடனமும் சேர்ந்து இந்த பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் விதமாக அமைந்துவிட்டது என்றே சொல்லலாம்.
மேலும் ஒரு நாள் முடிவதற்குள் இன்னும் பல சாதனைகளை இந்த பாடல் படைக்கும் எனவும் நம்பலாம்