V4UMEDIA
HomeNewsKollywoodநவம்பர் 5 இல் வாரிசு படத்தில் விஜய் பாடிய பாடல் வெளியீடு

நவம்பர் 5 இல் வாரிசு படத்தில் விஜய் பாடிய பாடல் வெளியீடு

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் வாரிசு. முதன்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளியுடன் இந்த படத்திற்காக கைகோர்த்துள்ளார் விஜய்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரபு, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசை நோக்கி போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே என்கிற பாடல் நவ-5ல் வெளியாகிறது. இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதற்கான புரோமோ வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. தளபதி விஜய்க்கு பல ஹிட் பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக் இந்தப்பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகர் விஜய்யே பாடியுள்ளார் என்பதுதான் இதில் ஹைலைட்

Most Popular

Recent Comments