V4UMEDIA
HomeNewsKollywoodபேமிலிமேன் 2 படத்தை தொடர்ந்து யசோதாவிலும் ஆக்சனில் மிரட்டும் சமந்தா

பேமிலிமேன் 2 படத்தை தொடர்ந்து யசோதாவிலும் ஆக்சனில் மிரட்டும் சமந்தா

சமந்தா நடிப்பில் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக உள்ள ஆக்ஷன் திரில்லர் படம் யசோதா. ஹரி மற்றும் ஹரிஷ் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளுக்கு கிடைத்து வரும் வரவேற்பை டிரைலரே சொல்லாமல் சொல்கிறது. இந்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்துள்ள இந்தப்படத்தின் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்  யானிக் பென், இந்த அதிதீவிரமான சண்டைக் காட்சிகளில் சமந்தா நடித்துள்ளது குறித்து பகிர்ந்துள்ளார்.

சமந்தாவின் தீவிரமான அர்ப்பணிப்பும் ஆர்வமும் மட்டுமே இந்த சண்டைக் காட்சிகளை அடுத்த நிலைக்கு எடுத்து சென்று பார்வையாளர்களுக்கு பரபரப்பூட்டுவதாக மாற்றியுள்ளது எனவும் கூறியுள்ளார். இதற்கு முன்பு யானிக் பென் சமந்தாவுடன் ‘தி ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸில் இணைந்து பணியாற்றினார். தற்போது சிறந்த ஆக்‌ஷன் காட்சிகளுக்காக மீண்டும் ‘யசோதா’ படத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.

ஐகிடோ, கிக் பாக்ஸிங், ஜீத் குனே டோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் மணல் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்றவரான யானிக் பென் புகழ்பெற்ற ஹாலிவுட் படங்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்கு சண்டைப் பயிற்சி கொடுத்துள்ளார். ‘ட்ரான்ஸ்போர்ட்டர் 3’, கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’, ‘டன்கிர்க்’, ஷாருக்கானின் ‘ரயீஸ்’, சல்மான் கானின் ‘டைகர் சிந்தா ஹை’, பவன் கல்யாணின் ‘அத்தாரிண்டிகி தரேதி’, மகேஷ் பாபுவின் ’1- நேனோக்கடைன்’, அல்ல் அர்ஜூனின் ‘பத்ரிநாத்’, சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ மற்றும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்

Most Popular

Recent Comments