அமரர் கல்கி எழுதி கடந்த 50 வருடங்களுக்கு முன்பு உருவான பொன்னியின் செல்வன் நாவல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி அதன் முதல் பாகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பொதுமக்களிடம் பெற்றது.
பொன்னியின் செல்வன் என்றாலே நினைவுக்கு வருவது ராஜராஜசோழன் தான். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த வரலாற்று கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம்ரவி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வனான தஞ்சாவூர் பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்தநாளான சதய விழா, இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் அதற்கேற்ப 1,037-வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலில் தற்போது நடைபெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் படக்குழுவினர் இந்த விழாவுக்காக ராஜராஜ சோழனை கவுரவப்படுத்தும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளன .
இந்த நிலையில் ராஜராஜ சோழனாக நடித்த ஜெயம்ரவி இதுகுறித்து நெகிழ்ச்சியாக தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது ராஜ ராஜசோழனுக்கு சதய விழா. இவரது புகழையும், பெருமையும் போற்றி, அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து பெருமை கொள்வோம். பொன்னியின் செல்வனாக “ திரையில் உம்மை பிரதிபலிக்க” நான் என்ன தவம் செய்தேனோ. என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.