நமது பாரத பிரதமர் மோடி தனக்கு வரும் பரிசுப்பொருட்கள் அனைத்தும் சமீபத்தில் ஏலம் விட செய்து அதன் மூலம் கிடைத்த மிகப்பெரிய தொகையை கங்கை நதியை சுத்தப்படுத்தவும் காசியில் உள்ள கோயிலை சீரமைக்கவும் பயன்படுத்தும் விதமாக கொடுத்திருந்தார் என்று செய்தி வெளியானது.
இந்த நிலையில் காசிக்கு பயணம் தனது குடும்பத்தினருடன் சென்றுவந்த நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து பாராட்டியிருந்தார்.
அதில் அன்புள்ள மோடி ஜி காசிக்கு சென்றிருந்த நான் அங்கு நல்ல தரிசனம் செய்தேன். கூடவே கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். காசி கோவிலை புதுப்பித்து அதை இன்னும் அற்புதமாகவும் எல்லோரும் எளிதாக தரிசனம் செய்யும் வகையிலும் மாற்றம் செய்து இருக்கும் உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக.. சல்யூட்” என்று கூறியிருந்தார்.
அதேசமயம் விஷாலின் இந்தப்பதிவு பிரதமர் மோடியின் கவனத்திற்கும் சென்றது. இதைத்தொடர்ந்து, “உங்களுக்கு காசியில் நல்லதொரு அனுபவம் கிடைத்ததற்கு நன்றி” என விஷாலின் பதிவு செய்து நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது..