இந்த வருடம் தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களின் திருமணங்களால் களைகட்டும் வருடம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி, சில வருடங்களாக காதலித்து வந்த நடிகர் ஆதி நிக்கி கல்ராணி ஜோடி ஆகியோர் அடுத்தடுத்து திருமண பந்தத்தில் இணைந்தனர்.
அதைத்தொடர்ந்து தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்ததிலிருந்து காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்ட பின்னர் அது உண்மைதான் என நிரூபிக்கும் விதமாக கவுதம் கார்த்திக் மஞ்சிமா ஜோடி கூட தங்களது காதல் குறித்து அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது. இவர்கள் திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பட்டியலில் நடிகை ஹன்சிகாவும் தற்போது இணைந்துள்ளார். ஆம் சோஹைல் கத்தூரி என்கிற தொழிலதிபரை திருமணம் செய்ய இருக்கிறார் ஹன்சிகா.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர் முன்பாக நின்று தங்களுடன் திருமணம் செய்து கொள் என்ற வாசகங்களுடன் சுற்றிலும் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது காதலை உறுதி செய்துள்ளார் ஹன்ஷிகா.
கடந்த சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவரும் நெருங்கிய நட்புடன் பழகி வந்ததாகவும் இதை திருமணபந்தம் ஆக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இவர்களது திருமணம் வரும் டிசம்பர் மாதம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடக்க உள்ளது என்றும் கூட இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.