விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும் சூர்யாவுடன் இணைந்து நடித்த ஜெய்பீம் படத்தின் மூலமாக ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகர் மணிகண்டன். அந்த படத்தை தொடர்ந்து சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த மணிகண்டன் தற்போது இன்னும் பெயரிடப்படாத அதே சமயம் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் குறட்டை பிரச்சினையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இணைந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி உள்ளது.

இந்த படத்தை விநாயக் சந்திரசேகர் என்பவர் இயக்குகிறா.ர் ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைகிறார்.

மணிகண்டன் தவிர முக்கிய கதாபாத்திரங்களில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

சென்னையை சுற்றி ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.