கன்னட திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் மறைந்த பிரபல கன்னட சினிமா நடிகர் ராஜகுமாரின் மகன்களில் ஒருவராகவும் விளங்கியவர் புனித் ராஜ்குமார். கடந்த வருடம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இளம் வயதிலேயே இவர் மரணத்தை தழுவினார். இவரது மறைவு இந்திய திரையுலகிற்கே மிகப்பெரிய அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தது.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சமூக நல ஆர்வலராக, தன்னால் இயன்ற உதவிகளை பல விதங்களில் பலருக்கும் செய்து வந்தவர் புனித் ராஜ்குமார். அதனால் அவர் இறந்த பின்பும் அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அவரை கௌரவிக்கும் விதமாக கர்நாடக மாநிலத்தின் மிக உயர்ந்த விருதான கன்னட ரத்னா விருது அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கான விழா நேற்று இன்று பெங்களூரில் உள்ள விதான் சவுதாவில் விமர்சையாக நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பிக்கும் விதமாக தமிழகத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஆந்திராவிலிருந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கன்னடத்திலேயே பேசி புனித் ராஜ்குமார் பற்றிய பெருமைகளை நெகிழும் விதமாக எடுத்துச் சொன்னார்.
அது மட்டுமின்றி அங்கு வந்திருந்த பார்வையாளர்களை நோக்கி இங்கு தமிழ் மக்களும் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள் என்னை வாழவைக்கும் தமிழக மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி என்று கூறினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர் இந்த விழாவிற்கு வந்து பெருமை சேர்த்ததற்காக அவருக்கு கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.