கடந்த வாரம் காலங்களில் அவள் வசந்தம் என்கிற ஒரே ஒரு படம் மட்டும் வெளியான நிலையில் வரும் நவம்பர் 4ஆம் தேதி கிட்டத்தட்ட ஐந்து படங்களுக்கு குறையாமல் தமிழில் ரிலீசாக இருக்கின்றன. காபி வித் காதல், நித்தம் ஒரு வானம், லவ்டுடே ஆகிய மூன்று படங்கள் முதல் வரிசையில் இருக்கின்றன.
அதில் குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இதை சோசியல் மீடியாவில் கண்கூடாக பார்க்கமுடிகிறது.
சுந்தர் சி படம் என்றாலே கலகலப்புக்கு 100% உத்தரவாதம் தரும் விதமாக எப்போதுமே இருக்கும். இந்த படத்தில் ஜீவா, ஜெய் இவர்களுடன் ஸ்ரீகாந்த்தும் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, பிக்பாஸ் புகழ் சம்யுக்தா முக்கிய வேடத்தில் டிடி ஆகியோர் நடிக்க, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி கூட்டணி காமெடியில் களைகட்டத் தயாராக இருக்கிறது.
சுந்தர்சி படங்கள் பெரும்பாலும் நகைச்சுவையோடு கடந்து போய்விடும். அதனால் இந்த படம் முதன்முறையாக ஒரு ஃபீல் குட் படமாக உருவாகி உள்ளது என்பதுதான் இயக்குனர் சுந்தர் சியின் சந்தோசமாக இருக்கிறது.
அந்தவகையில் காமெடி மட்டுமல்லாது ஒரு உணர்வுபூர்வமான படம் பார்த்த திருப்தியை காபி வித் காதல் கொடுக்கும் என்கிறார் சுந்தர் சி.
இந்த படத்திற்கு பக்கபலமாக யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் அமைந்துள்ளன. ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மனதில் குடியேறி விட்டன.