V4UMEDIA
HomeNewsKollywoodஇந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை

இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை

கடந்த 25 வருடங்களுக்கு முன்பு ஷங்கர், கமல் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இந்தியன். லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்கிற ஒரு தாக்கத்தை மக்களிடம் இந்த படம் ஓரளவுக்கு ஏற்படுத்தியது மறுக்க முடியாத உண்மை.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்கிற பெயரில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் துவங்கப்பட்டது. ஆனால் சில பிரச்சனைகள் மற்றும் கொரோனா தாக்கம் ஆகியவை காரணமாக தற்காலிகமாக இந்த படம் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கமலின் விக்ரம் கொடுத்த உற்சாகம் இந்தியன் படத்தை மீண்டும் முழு வீச்சுடன் துவங்க வைத்துள்ளது. இந்த படத்தின் படபிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் லேட்டஸ்டாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். இவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மேக்கப் போட்டு தயாராகும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது.

இவர் இதற்கு முன்னதாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தர்பார் படத்தில் மும்பை தாதா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது

Most Popular

Recent Comments