‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என ஒரு பழமொழி உண்டு. அதில் கொன்றால் பாவம் என்கிற வார்த்தையை டைட்டிலாக வைத்து தமிழில் உருவாகும் படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப் நடிக்கிறார். கன்னடத்திலிருந்து இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார் இயக்குனர் தயாள் பத்மநாபன்.
இவர் கன்னடத்தில் ஏற்கனவே பல படங்களை இயக்கியவர். கடந்த 2018ல் இவர் இயக்கிய ‘ஆ காராள ராத்திரி’ என்கிற படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்து இயக்குகிறார்.
கன்னடத்தில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது போல தமிழிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் தயாள் பத்மநாபன்.