V4UMEDIA
HomeNewsKollywoodகாஜல் அகர்வால்-யோகிபாபு கூட்டணியில் களைகட்டும் கோஸ்டி

காஜல் அகர்வால்-யோகிபாபு கூட்டணியில் களைகட்டும் கோஸ்டி

நடிகர் யோகிபாபு பல படங்களில் பிஸியான நகைச்சுவை நடிகராக நடித்து வந்தாலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் நடிக்க தயங்குவதில்லை. அப்படி அவர் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, தர்மபிரபு, மண்டேலா படங்கள் எல்லாமே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன.

அந்தவகையில் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் இணைந்து நடித்தது போல தற்போது காஜல் அகர்வாலுடன் கோஸ்டி என்கிற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் யோகி பாபு.

குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கல்யாண் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹாரர் காமெடி திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்ல காஜல் அகர்வாலுக்கும் நீண்ட நாட்கள் கழித்து தமிழில் வெளியாகும் படமாக இது அமைய உள்ளது.

இந்தப்படத்திற்கு சிஎஸ் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

Most Popular

Recent Comments