விஜய் டிவியிலிருந்து சிவகார்த்திகேயன் வெளிவந்து மிகப்பெரிய ஹீரோ ஆன பிறகு அதை தொடர்ந்து அங்கே சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் பணியாற்றிவந்த இன்னும் சிலருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
அந்த வகையில் கவின், தர்ஷன், ரியோ ராஜ் ஆகியவர்களுக்கு கதாநாயகர்களாக வாய்ப்பு தேடி வந்தது. இதில் நடிகர் ரியோ ராஜ் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது புதிய படம் ஒன்றை ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று நடைபெற்றது.
மீசைய முறுக்கு’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஹரிஹரன் ராம் இந்தப் படத்தை இயக்குகிறார்.
மாளவிகா மனோஜ் மற்றும் பவ்யா ட்ரிகா படத்தின் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சார்லி, ’கோலமாவு கோகிலா’ படப்புகழ் அன்பு தாசன், ‘கனா காணும் காலங்கள்’ புகழ் ஏகன், எருமசாணி யூடியூப் புகழ் கெவின் ஃபெல்சன், ‘கோமாளி’, ‘வாத்தி’ படப்புகழ் ப்ரவீனா மற்றும் பலர் இந்தப் படத்தின் நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் படத்திற்காக ரியோ ராஜ் கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்திற்கும் மேலாக நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் இருந்துள்ளார்.
இந்தப் படம் ஆண் மற்றும் பெண் இடையேயான காதல் மற்றும் உறவுகளில் மட்டும் கவனம் குவிக்காமல் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான எல்லையற்ற அன்பு குறித்தும் பேசுகிறதாம்.