வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் மகத் ராகவேந்திரா. அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அதிரடி செயல்பாடுகளால் அதிக அளவு ரசிகர்களை சென்றடைந்தார். அதை தொடர்ந்து தமிழில் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் முதன் முறையாக டபுள் எக்ஸ்எல் என்கிற இந்தி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் மகத். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் லிங்கா படத்தில் ஜோடியாக நடித்த சோனாக்ஷி சின்ஹா மற்றும் காலா படத்தில் இணைந்து நடித்த ஹீமா குரோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர்.
முதாஸ்ஸர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதி தயாரித்துள்ள இப்படத்தை சத்ரம் ரமணி இயக்கியுள்ளார். ஜாகீர் இக்பால் மற்றொரு நாயகனாக நடித்திருக்கிறார். நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு வருகிறது
உலகில் அனைவருக்கும் தன் உடல் மேல் விமர்சனங்கள் இருக்கும். தான் அழகில்லை என்ற எண்ணம் இருக்கும் அதனை உடைக்கும் வகையில்,ஒரு ஆணோ, பெண்ணோ அவர்கள் யாராக இருக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே அவர்கள் கொண்டாடப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த படம் தயாராகியுள்ளது..