V4UMEDIA
HomeNewsKollywoodஅருண்விஜய் படத்திற்காக சென்னையில் உருவாக்கப்பட்ட லண்டன் சிறை

அருண்விஜய் படத்திற்காக சென்னையில் உருவாக்கப்பட்ட லண்டன் சிறை

இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருண்விஜய் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படம் அச்சம் என்பது இல்லையே. இந்த படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார்.

2.O, தங்க மகன் ஆகிய படங்களில் நடித்ததை தொடர்ந்து சினிமாவுக்கு சிறிய இடைவெளிவிட்டு லண்டனில் செட்டிலாகி இருந்த எமி ஜாக்சன் இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பி வந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இதற்கு முன்பு வரை லண்டனில் நடைபெற்று வந்தது. கதையும் அந்த விதமாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சென்னை பின்னி மில் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக லண்டன் சிறையின் பிரதியை செட் அமைத்துள்ளனர்.

ராமலிங்க மேஸ்திரி உதவியுடன் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார்.

இந்த ஷெட்யூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இதில் பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுடன் அருண் விஜய் பங்கேற்கக் கூடிய தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது முன்பே திட்டமிட்டபடி படத்தின் ஷெட்யூல் மிகச் சரியாக போய் கொண்டிருப்பது குறித்து தயாரிப்பாளர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் விஜய்யும் திட்டமிட்டபடி அந்த நேரத்திற்குள்ளோ அல்லது அதற்கு முன்போ மிகச்சரியாக படப்பிடிப்பை முடித்து விடக்கூடியவர். அதைப் போலவே ‘அச்சம் என்பது இல்லயே’ படப்பிடிப்பும் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிந்து விடும் என்று சொல்லப்படுகிறது

Most Popular

Recent Comments