சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காந்தாரா திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி அந்த படம் குறித்து தனது மனம் திறந்து பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து அந்த படத்தை இயக்கி நடித்திருந்த ரிஷப் வெட்டி சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த தகவலை நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
இந்த நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜியை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகை குஷ்பு சிறிது நேரம் அவருடன் உரையாடி மகிழ்ந்தார். இந்த தகவலை சூப்பர்ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார் குஷ்பு.
நடிகை குஷ்பு தமிழில் முதன்முதலில் அறிமுகமான தர்மத்தின் தலைவன் படத்தில் இருந்து இதற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் வரை அவருடன் இணைந்து கடந்த 35 வருடங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.
அந்த நாட்டின் அடிப்படையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்த குஷ்பு, “இது ஒரு கோப்பை தேநீருடன் சூப்பர் ஸ்டாரை சந்தித்து மகிழ்ந்த ஒரு அருமையான சந்திப்பு. இப்போதும் அவர் என்னை வியக்க வைக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகன் என்று சொல்வதை விட பக்தன் என்று சொல்லும் அளவுக்கு நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் எப்போதுமே தனது பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஆசி பெற தவறுவதில்லை.
அதேபோல இந்த பிறந்த நாளிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அது குறித்த புகைப்படத்தையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.