தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த படம் பொங்கல் வெளியீடாக வெளியாக தயாராகி வருகிறது. ரசிகர்கள் இப்போதிருந்தே தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சோசியல் மீடியா குறிப்பாக டுவிட்டர் பக்கத்தில் 4 மில்லியன் பார்வையாளர்களால் பின்தொடரப்படுகிறார் தளபதி விஜய்.

என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே!’ என்று சொல்வதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக, இன்று தன் ரசிகன் உருவாக்கிய ஒரு டிஜிட்டல் புகைப்படத்தினை தனது புரொபைல் படமாக பதிவேற்றம் செய்துள்ளார் விஜய்.

இதனை அறிந்து விஜய் ரசிகர்கள் மிகவும் நெகிழ்ந்து போய் உள்ளனர் இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தன் ரசிகனுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தளபதி என்றுமே தவறியதில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்று என்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்

விஜய் நடிப்பில் பொங்கல் பரிசாக ‘வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தளபதியின் இந்த செயல் அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறது..