சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 மற்றும் தர்பார் ஆகிய படங்களை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது.
தற்போது பொன்னியின் செல்வன் போன்ற பல பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் அடுத்ததாக மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் தயாரிக்க எப்போதுமே தயாராகவும் ஆவலாகவும் இருக்கிறது.
அதை உறுதிப்படுத்துவது போல இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீட்டிற்கே லைக்கா சேர்மன் சுபாஷ்கரன், துணை சேர்மன் பிரேம் சிவசாமி மற்றும் தலைமை நிர்வாகி தமிழ்குமரன் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் லைகா தலைமை நிர்வாகி தமிழ்குமரன்.