கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கன்னட சினிமாவில் வெளியான காந்தாரா திரைப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து அதற்கடுத்த வாரத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் இந்த படம் உடனடியாக டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி, நான்கு மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படம் ரசிகர்களை மட்டுமல்லாது சினிமா பிரபலங்களையும் கவர்ந்து இழுத்து விட்டது என்று சொன்னால் அது மிகை இல்லை. குறிப்பாக சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தை பார்த்துவிட்டு படத்தையும் அதில் ஹீரோவாக நடித்த ரிஷப் ஷெட்டியின் நடிப்பையும், படம் உருவான விதத்தையும் சிலாகித்து பாராட்டி இந்திய சினிமாவின் பெருமைப்படக் கூடிய படம் என்று தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
அதற்கு சோசியல் மீடியாவில் நன்றி தெரிவித்திருந்தார் ரிஷப் ஷெட்.டி இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீட்டிற்கே நேரில் தேடிவந்து அவரை சந்தித்து வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுள்ளார் ரிஷப் ஷெட்டி.
இந்த சந்திப்பின்போது காந்தாரா படத்தின் பல விஷயங்களை சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் பகிர்ந்துகொண்டார் ரிஷப் ஷெட்டி..
எப்போது நல்ல படம் வெளியானாலும் அதனை பார்த்துவிட்டு மனதார பாராட்டுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அந்த வகையில் சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்துவிட்டு இவர் பாராட்டியதை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கு தமிழகத்தில் அதிக அளவில் தியேட்டர்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.