தொண்ணூறுகளின் இறுதியில் அறிமுகமாகி கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. அதன்பிறகு நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி விட்டவர், கடந்த சில வருடங்களுக்கு முன் 36 வயதினிலே என்கிற படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து ராட்சசி, மகளிர் மட்டும், உடன்பிறப்பு என நல்ல கதாபாத்திரங்களை தேர்வுசெய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக, காதல் ; தி கோர் என்கிற மலையாளப்படத்தில் ஜோதிகா நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜியோ பேபி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்த நிலையில் கேரளாவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் ஜோதிகா கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.