V4UMEDIA
HomeNewsKollywoodகமல் பிறந்தநாளில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் விக்ரம் 100வது நாள் விழா

கமல் பிறந்தநாளில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் விக்ரம் 100வது நாள் விழா

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் நடித்து வெளியான விஸ்வரூபம் 2 தூங்காவனம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஒருபுறம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்று விட்டதாலும், இன்னொருபுறம் அரசியல் கட்சி ஆரம்பித்து அதில் பயணிக்க ஆரம்பித்து விட்டதாலும், அவர் இனி பெரும்பாலும் நடிக்கமாட்டார்.. நடித்தாலும் படங்கள் வரவேற்பை பெறாது என்பது போன்ற பேச்சுக்கள் எழ ஆரம்பித்தன.

இந்த சமயத்தில்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தை துவங்கினார் கமல். அந்த படத்தில் பஹத் பாசில், விஜய்சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் என பல இளம் நட்சத்திரங்களை உள்ளே அழைத்து வந்தார். படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மிகப்பெரிய அளவில் வசூலையும் குவித்தது,

அந்த வகையில் கமல் இதுவரை நடித்த படங்களில் இந்த படம் மிகப்பெரிய வசூலைக் பெற்றதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டது, அதுமட்டுமல்ல கமல் மீண்டும் தனது பார்முக்கு திரும்பி வந்துவிட்டார் என்றும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில்தான் இந்த படம் 100வது நாளை கடந்தது. இந்த நிலையில் இந்த படத்தை நூறாவது நாள் கொண்டாட்டத்தை கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதை படத்தின் தயாரிப்பாளராக நடிகர் கமல்ஹாசனும் அவருடன் மகேந்திரனும் இணைந்து கவனிக்கின்றனர்.

இந்த நிகழ்வின் போது இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட அனைவரும் கௌரவிக்கப்பட இருக்கின்றனர்.

Most Popular

Recent Comments