தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அசோக் செல்வன். அதன் பலனாகத்தான் மலையாளத்தில் மிகப்பெரிய வரலாற்றுப் படமாக உருவான குஞ்சாலி மரைக்கார் என்கிற படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் அவர் தமிழில் நடித்துள்ள நித்தம் ஒரு வானம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் நவம்பர் 4ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளது.
ரா.கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகிகளாக ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ராஜசேகர் என மூன்று பேர் நடித்துள்ளனர்.
மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தியாவிலுள்ள விதவிதமான லொகேஷன்களில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் வெளியாக வேண்டிய இந்த படம் பொன்னியின் செல்வன் படத்தின் தடையில்லா ஓட்டத்தால், ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு தற்போது நவம்பரில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.