தமிழ் சினிமாவில் மிகவும் ஆவலுடன் பல வருடமாக எதிர்பார்க்கப்பட்ட திருமணம் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடியுடையது. நயன்தாரா பல படங்களில் பிசியாக நடித்து வந்ததால் இந்த திருமணம் சற்று தாமதமாகி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது திருமணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் தாங்கள் இரட்டை குழந்தைக்குப் பெற்றோர் ஆனதாக விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் அறிவித்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினர்.
திருமணமாகி நான்கு மாதங்களில் இது எப்படி சாத்தியம், இவர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றார்களா என்கிற விவாதம் சோசியல் மீடியாவில் களைகட்டியது. இது குறித்து உண்மை நிலை என்ன என்று அறியும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த பிரச்சனையை ஆய்வுசெய்த அதிகாரிகள் நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் எந்த விதிமுறை மீறலும் நடைபெறவில்லை என்று அறிக்கை அளித்துள்ளனர்.
இதன்மூலம் கடந்த சில நாட்களாக விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவருக்கும் ஏற்பட்டிருந்த அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து இப்போது விடுதலை கிடைத்து இருக்கும் என நம்பலாம்.