V4UMEDIA
HomeNewsKollywoodநவம்பர் 25ல் ரெய்டு வர தயாராகும் ஏஜென்ட் கண்ணாயிரம்

நவம்பர் 25ல் ரெய்டு வர தயாராகும் ஏஜென்ட் கண்ணாயிரம்

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான குலுகுலு படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி உள்ள படம் ஏஜென்ட் கண்ணாயிரம்.

இந்த படம் வரும் நவம்பர் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

தெலுங்கில் நவீன் பாலிஷெட்டி நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஏஜன்ட் சாய் சீனிவாசா ஆத்ரேயா என்கிற இந்த படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகியுள்ளது. வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா என்பவர் இந்த படத்தை தமிழுக்கு ஏற்றபடி சில மாற்றங்களுடன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ரியா சுமன், சுருதி ஹரிஹரன் ஆகியோர் நடிக்க முக்கிய வேடங்களில் முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ஈ.இராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Most Popular

Recent Comments