Home News Kollywood கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது ஏன் ; சாக்ஷி அகர்வால் விளக்கம்

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது ஏன் ; சாக்ஷி அகர்வால் விளக்கம்

நடிப்பிற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள சர்வதேச புகழ்பெற்ற நடிப்பு பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் காலா படத்தில் அவரது மருமகளாக நடித்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் புகழ் வெளிச்சம் பெற்ற இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இன்னும் அதிக ரசிகர்களிடம் அறிமுகமானார். தமிழில் தற்போது இவரது கைவசம் கிட்டத்தட்ட அரை டஜன் படங்கள் இருக்கின்றன.

இதுபற்றி சாக்ஷி அகர்வால் கூறும்போது பிரபுதேவா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பஹிரா’ மற்றும் இயக்குநரும், நடிகருமான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் ‘நான் கடவுள் இல்லை’ என்ற இரண்டு படங்களின் பணிகளை நிறைவு செய்திருக்கிறேன். ‘கெஸ்ட் – சாப்டர் 2’ எனும் அனிமல் திரில்லர் ஜானரிலான படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன்.

அறிமுக இயக்குநர் விக்கி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்திங நடிகர் சந்தோஷ் பிரதாப்புக்கு ஜோடியாக அழுத்தமான வேடத்தில் நடித்து வருகிறேன். இதை தொடர்ந்து ‘கந்தகோட்டை’ படத்தை இயக்கிய இயக்குநர் சக்தி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன்

அதுமட்டுமல்ல தொடர்ந்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சாக்ஷி அகர்வால். பட வாய்ப்புகளுக்காக இப்படி இவர் கிளாமராக புகைப்படங்களை வெளியிடுகிறார் என்கிற ஒரு பேச்சும் குற்றச்சாட்டாக வே உலவி வருகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சாக்ஷி அகர்வால் பட வாய்ப்பிற்காக பதிவிடவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்துகிறேன். என்னுடைய சமூக வலைதள பக்கத்தை கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பின்தொடர்பாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுடனான உறவையும், நட்பையும் ஆரோக்கியமாக பேணுவதற்கு புகைப்படங்களை பதிவிடுகிறேன். தொடர்ந்து சமூகம் குறித்த ஆக்கபூர்வமான விசயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.