மஹா படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஹன்சிகா நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உருவாகி வரும் படம் கார்டியன். இரட்டை இயக்குனர்கள் சபரி மற்றும் குரு சரவணன் இயக்கத்தில், இதுநாள் வரை பெயரிடப்படாத உருவாகி வந்த இந்த படத்திற்கு தற்போது கார்டியன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பார்க்கும்போது இது ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகிறது என்பதை எளிதாக உணர முடிகிறது. குறிப்பாக ஹன்சிகா பேய் போன்று ஒரு மிரட்டும் வேடத்தில் இந்த போஸ்டரில் காட்சியளிக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் விஜய் சந்தர் தயாரிக்கிறார். முதன்முறையாக இவர் சிம்புவை வைத்து வாலு என்கிற படத்தை இயக்கியபோது அதில் கதாநாயகியாக நடித்து இவருக்கு ஆதரவு தந்தவர் ஹன்சிகா என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக ஹாரர் திரில்லராக உருவாகி இருந்த அரண்மனை 2 படத்திலும் ஹன்சிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.