கடந்த நான்கு வருடங்களுக்கு முன் வெளியான வெள்ள ராஜா என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் குகன் சென்னியப்பன். தற்போது நடிகர் சத்யராஜ் மற்றும் ராக்கி புகழ் வசந்த் ரவி இருவரையும் கதையின் நாயகர்களாக வைத்து வெப்பன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் இதற்கு முன்பு சத்யராஜ் தான் ஏற்ற கதாபாத்திரத்திங்களில் இருந்து மாறுபட்டும் அதேபோன்று நடிகர் வசந்த் ரவி இந்த படத்திற்காக தாடி இல்லாத முக தோற்றத்துடனும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ்மேனன் நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ராஜீவ்மேனன் கதாபாத்திர போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது.
அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பிரபுதேவா அரவிந்த்சாமி நடித்த மின்சார கனவு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகிய சர்வம் தாள மையம் உள்ளிட்ட சில படங்களையும் ராஜெவ் மேனன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.