நடிகர் தனுஷ் முதன்முறையாக நேரடி தெலுங்கு திரைப்படமாக உருவாகிவரும் வாத்தி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான வெங்கி அட்லூரி என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/07/vaathi-1.jpg)
இதில் கதாநாயகியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படம் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி ரிலீசாக இருக்கிறது. தெலுங்கில் இந்த படம் சார் என்கிற பெயரில் வெளியாகிறது.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/09/vaathi-2-819x1024.jpg)
இந்த நிலையில் தனுஷ் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. ஒரு போஸ்டரில் ஆக்சன் அவதாரத்தில் எதிரிகளை தனுஷ் பந்தாடுகிறார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/10/vaathi-2-656x1024.jpg)
இன்னொரு போஸ்டர் இதோ புரட்சி கவிஞர் பாரதியார் கெட்டப்பில் கருப்பு உடை அணிந்து தலையில் முண்டாசு கட்டியபடி அதிலும் ஆக்ரோஷமாக ஆக்சன் காட்சிகளுக்கான ஒரு முன்னோட்ட த்துடன் காணப்படுகிறார். தனுஷ் ரசிகர்களுக்கு மிச்சயம் பெரிய ட்ரீட் காத்திருக்கிறது.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/10/vaathi-1-1024x708.jpg)