நடிகர் கமல்ஹாசனின் மகள் என்றாலும் அந்த அடையாளத்தை எங்குமே பயன்படுத்தாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு செலக்டிவான படங்களில் நடித்துவருகிறார் ஸ்ருதிஹாசன்.
அவ்வப்போது படங்களில் நடிக்காமல் இடைவெளி விட்டாலும் எங்கே தனக்கான இடம் பறிபோய்விடுமோ என்கிற எண்ணமோ அல்லது நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தாக வேண்டும் என்கிற எண்ணமோ துளியும் இல்லாமல் நிதானமாக அதே சமயம் நேர்த்தியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்
அந்த வகையில் தற்போது தெலுங்கில் முன்னணி இயக்குனர்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோருடனும் பாகுபலி ஹீரோ பிரபாஸுடன் சலார் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் டோலிவுட் பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார் ஸ்ருதிஹாசன் .
பாலிவுட் முன்னணி நடிகர் மார்க் ரவுலே நதிக்கு தி ஐ என்கிற படத்தில் தான் கதாநாயகியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன் .தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கிரீஸ் நாட்டில் முகாமிட்டுள்ளார்.
உளவியல் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம். கதைப்படி ஒரு விதவை பெண், தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய சாம்பலை கரைப்பதற்காக கிரேக்க தீவுக்கு பயணிக்கிறார். அதன் போது ஏற்படும் உளவியல் சார்ந்த திகில் திருப்பங்களும், சம்பவங்களும் தான் படத்தின் திரைக்கதை.