Home News Kollywood ஆளாளுக்கு மிரட்டும் மைக்கேல் டீசர் வெளியானது

ஆளாளுக்கு மிரட்டும் மைக்கேல் டீசர் வெளியானது

விஜய்சேதுபதியின் மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. அந்த வகையில் இவர் தற்போது நடிகர் சந்தீப் கிஷன், விஜய்சேதுபதி இருவரையும் இணைத்து மைக்கேல் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் திவ்யான்ஷா வரலட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க முக்கிய வேடத்தில் கௌதம் மேனன் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் ஒவ்வொரு மொழியிலும் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் மூலமாக வெளியிடப்பட்டது. டீசரை பார்த்த பலருக்கும் நிச்சயமாக ஒரு பிரமிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது உண்மை.

டீசரில் படத்தின் முக்கியமான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. மேலும் இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும், கௌதம் வாசுதேவ் மேனனின் வில்லத்தனம் கலந்த காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. இதன் கதை எண்பதுகளில் தொடங்குவது போன்று அமைக்கப்பட்டிருப்பதால், நடிகர்களின் கெட்டப்புகள் மற்றும் அரங்கங்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது..

விஜய் சேதுபதியின் மிரட்டலான தோற்றம், கௌதம் வாசுதேவ் மேனனின் அசுரத்தனமான தோற்றம் ஆகியவையும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், அனசுயா பரத்வாஜ், நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோரும் இடம் பெற்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

‘மைக்கேல்’ படத்தின் டீசர், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது..