V4UMEDIA
HomeNewsKollywoodஇன்னும் குறையாத கொரோனா தாக்கம் ; பாதிப்புக்கு ஆளான ஜெயம்ரவி

இன்னும் குறையாத கொரோனா தாக்கம் ; பாதிப்புக்கு ஆளான ஜெயம்ரவி

கடந்த 2020 கொரோனா முதல் லை ஆரம்பித்தது முதல் கடந்த இரண்டு வருடங்களாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த வருடம் மூன்றாவது அலை வருவது போல ஒரு அச்சத்தை உருவாக்கி அதேசமயம் அப்படியே அமுங்கி விட்டது. இதனால் கொரோனா தாக்கம் குறைந்து விட்டதாக தோன்றினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் கொரோனா தவறான பாதிப்புக்கு ஆளாகிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி தற்போது கொரோனா தாக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார் என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள ஜெயம்ரவி கொரோனா தாக்கம் பற்றிய அறிகுறி தெரிந்ததுமே என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் முறையான சிகிச்சை பெற்று வருகிறேன்.

சமீப நாட்களில் என்னை சந்தித்தவர்கள் எதற்கும் ஒரு முறை தங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.. முகமூடி அணிந்து பாதுகாப்பை கடைபிடியுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Most Popular

Recent Comments